அரசியல்உள்நாடு

மக்கள் விரும்பும் மாற்றம் ஏற்பட்டுள்ளது – எமது அனுபவம் நாட்டிற்கு தேவையானது – டக்ளஸ்

ஒருவருக்கு நீந்தக் கற்றுக்கொடுக்கும் போது அனுபவம் அருகில் இருப்பது அவசியமெனவும் அந்த சிறப்பான அனுபவம் தம்மிடம் இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்களுடன் நேற்றைய தினம் யாழ் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் விரும்பும் அரசியல் மாற்றம் தற்போது எம்மத்தியில் ஏற்ப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாகவும் இந்த மாற்றம் உறுதியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தமது கட்சியின் தேசிய நல்லிணக்கம் வலுவான நிலையில் உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related posts

சவூதி அரேபியா செல்லும் அலி சப்ரி!

கோப் – கோபா குழுக்கள் முதல் முறையாக இன்று கூடுகின்றன

மேலும் 986 பேர் கைது!