அரசியல்உள்நாடு

மக்கள் விடுதலை முன்னணியினர் அரசியல் பல்டிகளை அடித்தனர் – சஜித் பிரேமதாச

இறுதி வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல விடயங்களை ஐக்கிய மக்கள் சக்தி மீது முன்வைத்தார்.

தற்போதைய அரசாங்கம் பல்டி அடிக்காது என ஜனாதிபதி தெரிவித்த போதிலும், மக்கள் விடுதலை முன்னணியினர் அன்று அரசியல் பல்டிகளை அடித்தனர்.

விமல் வீரவன்ச மக்கள் விடுதலை முன்னனணியை விட்டு வெளியேறினார்.

அமைச்சரவை அமைச்சர்களாக இருந்த ஜேவிபி உறுப்பினர்கள் பலர் கட்சியை விட்டு வெளியேறிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

மக்கள் விடுதலை முன்னனணியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு களுத்துறை மாவட்ட வேட்பாளர்களுடன் இன்று (22) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தமது நேற்றைய உரையில் ஐக்கிய மக்கள் சக்தியில் முடிவெடுப்பது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். முடிவுகளை எடுக்க பயப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் போன்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறாமல், மக்கள் சார்பான முடிவுகளையே ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கும். மக்களை தவறாக வழிநடத்தும் ஏமாற்று வேலைத்திட்டங்களையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்ததும் IMF உடன்படிக்கைகளை மாற்றுவோம் என்று கூறினர்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எந்த மாற்றமும் இல்லாமல் முன்னாள் ஜனாதிபதியின் அதே தொங்கு பாலத்திலயே பயணித்துக் கொண்டிருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதியின் அதே கொள்கைகளையே பின்பற்றுகிறது. மக்களுக்கு ஒன்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிறகு வேறு எதையோ செய்து கொண்டிருக்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியால் இது போன்ற எரிச்சலூட்டும் வேலையை செய்ய முடியாது.

மக்களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்றி வழங்கிய வாக்குறுதிகளுக்கு புறம்பாக வேறு கொள்கைகளை முன்னெடுப்பது வெட்கட்கேடான செயலாகும்.

மக்களை ஏமாற்றும் ஏமாற்று முடிவுகளை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் தயாரில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

வேலைநிறுத்தப் போராட்டத்தால் தாமதமாகும் சுங்க நடவடிக்கைகள்.

சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஆர்ப்பாட்டம்.