உள்நாடு

மக்கள் வங்கி ATM களில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை

(UTV | கொழும்பு) –   மக்கள் வங்கி ATM களில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை

நேற்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்கள் வங்கி கிளைகளின் ஏ.டி.எம். இயந்திரங்களில் சுமார் ஒரு கோடிக்கும் அதிக பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (டிச 30) அதிகாலை இவ்வாறு ஹிக்கடுவை, காலி, பத்தேகம ஆகிய 03 பிரதேசங்களிலும் அதாவது, ஹிக்கடுவை A.T.M. இல் 4 680 000 ரூபாயும் , காலி A.T.M. இல் 275 000 ரூபாயும் , பத்தேகம A.T.M. இல் 5 700 000 ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம், அதிகாலையில் குறித்த ஏ.டி.எம். இயந்திரங்களுக்கருகில் வருகை தந்த வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் பிரஜைகளால் , அங்கு காணப்பட்ட சி.சி.டி.வி. கமராக்களை செயழிக்கச் செய்து , ஏ.டி.எம். இயந்திர தரவுகளை மாற்றி இவ்வாறு பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த 03, பிரதேசங்களிலுமே ஒரு முறையில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளமையால் , ஒரே தரப்பினரே அனைத்து கொள்ளையுடனும் தொடர்புபட்டுள்ளனர் எனவும், சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் , இதனை அடிப்படையாகக் கொண்டு ஹிக்கடுவை, காலி, பத்தேகம உள்ளிட்ட பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சேர் ஜோன் ரபட் போட்டியில் நிந்தவூருக்கு தேசியமட்ட பதக்கம் – ரிஷாட், தாஹிர் எம்.பி வாழ்த்து

editor

அஜித் பிரசன்னவிற்கு பிணை

மேலும் 6 மாதங்களுக்கு தடை நீடிப்பு