சூடான செய்திகள் 1

‘‘மக்கள் பேரணி கொழும்புக்கு’’ அனைவரும் ஒன்று கூடப்பட வேண்டிய இடம் குறித்து இன்னும் சற்று நேரத்தில்…

(UTV|COLOMBO)-‘மக்கள் பேரணி கொழும்புக்கு’’ அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்க தற்சமயம் நாடளாவிய ரீதியாக உள்ளோர் கொழும்புக்கு வருகை தந்து கொண்டிருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

பேரணி ஆரம்பமாகும் மற்றும் முடிவுறும் இடங்கள் குறித்து இறுதித் தீர்மானம் விரைவில் எட்டப்பட்டு அது குறித்த குழுவினருக்கு அறிவிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

விரைவான தொழில்நுட்பத்திற்காக முறையான இயந்திரம் ஒன்று பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இது குறித்து தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபெகுணவர்த்தன, “எல்லா பேரூந்துகளுக்கும் எமது நபர் ஒருவரை நியமித்துள்ளோம். அவர்களுடன் நாம் தொடர்பிளுள்ளோம். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு அமைப்பாளரைக் குறிப்பிட்டுள்ளோம்… அதனூடாக பாதைகள் முடக்கப்பட்டால் தெரிவிக்கலாம்… பிரச்சினை உள்ள இடங்கள் தெளிவாகத் தெரியும்… மேலும், பல்வேறு ஆலோசனைகளை பெரும் நோக்கில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சட்டவல்லுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .. . காலை 11.00 மணியளில் SMS குறுந்தகவல் மூலம் .. சமூக வலைதளங்களினூடாக மற்றும் ஊடக அறிக்கைகள் மூலம் மக்கள் ஒன்று சேரவேண்டிய இடமானது தெரிவிக்கப்படும்.” எனத் தெரிவித்திருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க தயார்-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 10ம் திகதி உச்ச நீதிமன்றத்தில்

ரயில்வே தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளுக்கு ஒன்றரை மாதத்தில் தீர்வு