சூடான செய்திகள் 1

மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்த முல்லைத்தீவு மக்களுக்கு ஐ.எஸ்.மொஹிடீன் நன்றி தெரிவிப்பு!

(UTV|HATTON)-முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முண்ணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்து, அதன் மூலம் அந்த மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் 12 ஆசனங்களைப் பெற்றுத்தந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் வாக்காளர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த கட்சியின் முக்கியஸ்தர் ஐ.எஸ்.மொஹிடீன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் 03 ஆசனங்களையும், மாந்தை கிழக்கு பிரதேச சபையில் 04 ஆசனங்களையும், துணுக்காய் பிரதேச சபையில் 03 ஆசனங்களையும், புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 02 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்டுள்ளது.

மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது நம்பிக்கை கொண்டு பல்வேறு பிரச்சினைகள், தடைகளையும் மீறி வாக்களித்த மக்களை, மக்கள் காங்கிரஸ் ஒருபோதும் கைவிடமாட்டாது எனவும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகளை மேலும் வலுவூட்டுவதற்கு, முல்லைத்தீவு மக்கள் தமது கட்சிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது வெளியேறி மெனிக்பாமில் தஞ்சமடைந்திருந்த வன்னி மக்களுக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்ட பணிகளுக்கு உள்ளூராட்சி தேர்தல் மூலம் மக்கள் தமது நன்றிகளை வெளிப்படுத்தியுள்ளனர். மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக மக்கள் காங்கிரஸ் தொடர்ந்தும் செயற்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சபாநாயகருக்கு எதிரான பிரேரணை 5ஆம் திகதி!

எதிர்கட்சி தலைவர் சபாநாயகருக்கு கடிதம்

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு