சூடான செய்திகள் 1

மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்!

(UTV|COLOMBO)-திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள், போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகியோரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

திருமலை மாவட்டத்தில் கட்சியை மேலும் பலப்படுத்துவது தொடர்பாகவும்,  எதிர்காலத்தில் கட்சியினால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் மற்றும் வட்டாரங்களின் அபிவிருத்தி தேவைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் தவிசாளரும், பிரதியமைச்சருமான அமீர் அலி, தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி, செயலாளர் சுபைர்தீன், மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

முடிவின்றி நிறைவடைந்த ஐ.தே.கட்சியின் பா. குழுக் கூட்டம்

கஞ்சிபான இம்ரான் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்