உள்நாடு

மக்கள் அர்ப்பணித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தலாம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் என்ற ரீதியில் எம்மால் முடிந்த அனைத்தையும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

“.. உலகில் 3 நாடுகளே தடுப்பூசி விடயத்தில் சிறந்த நிலையை அடைந்துள்ளது. அதில் இலங்கையும் ஒன்றாகும். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் செயற்பாடுகளும் நடத்தைகளும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இருக்க வேண்டும்.

தற்போது நாட்டில் 75 சதவீதமானவர்களுக்கு 2 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.

மக்களின் அர்ப்பணிப்புகளிலும் இதனைக் கட்டுப்படுத்த முடியும். எம்மால் முடிந்ததை
செய்கிறோம். மக்கள் கைகளிலேயே மிகுதி தங்கியுள்ளது. பிரச்சினைகள் உள்ளனவென எமக்கு தெரியும். எனினும், இந்த நிலை நீடித்தால் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம். அப்போது கட்சி, நிறம், இல்லாமல் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

எதிர்க்கட்சியை ஒடுக்கும் செயற்பாடு எங்கும் முன்னெடுக்கவில்லை. ஆனால், அவர்கள் தமது பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளனர். அவர்கள் உண்மையில் நாட்டை நேசிப்பவர்கள் அல்லர். அவர்களின் தேவை நாட்டில் கொரோனா தொற்றை பரப்புவதாகும்..” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

நீதிமன்ற கட்டமைப்பிற்கு தாங்கிக் கொள்ள முடியாதளவு வழக்குகள் – நீதி அமைச்சர்

இராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கு கொரோனா

சகலரும் இணங்கக்கூடிய கல்விக் கொள்கையைத் தயாரிப்பது முக்கியமானது