கிசு கிசு

மக்களே மிகுந்த அவதானம் தேவை!!

(UTV|COLOMBO)  கேக் சாப்பிடும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் கடும் வெயிலில் படும் வகையில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் கேக் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வெப்பம் படும் வகையில் வைக்கப்படும் கேக்களின் தரம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனால் கேக்கினை குளிர்சாதன பெட்டியில் அல்லது குளிரான இடத்தில் வைத்து விற்பனை செய்யுமாறு வர்த்தகர்களிடம் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுள்ளது.

இத்துடன், கேக் கொள்வனவு செய்யும் மக்கள் காலவதியாகும் திகதிக்கு மேலதிகமாக கேக்கின் தரம் தொடர்பில் அதிக அவதானத்தை செல்லுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ரம்புக்கன பிரண்டிக்ஸில் 19 பேருக்கு கொரோனா

முகக்கவசம் அணியாதோர் இறந்தவர்களுக்கு கல்லறை தோண்ட வேண்டும்

ஒமிக்ரோன் பிறழ்வு இலங்கைக்கு உள்நுழைந்துள்ளதா?