வகைப்படுத்தப்படாத

மக்களுக்கு சேவை செய்ய பதவிகள் தேவை இல்லை

(UTV|COLOMBO)-பல அரசியல்வாதிகள் மக்கள் சேவைக்காக அன்றி, பணம் ஈட்டிக் கொள்வதற்காகவே அரசியல் பதவிகளைப் பெற்றுக் கொள்ள போராடுகின்றனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

அவிசாவலை – கொஸ்கமவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 50 சதவீதமான அரசியல்வாதிகள், பணத்தை கொள்கையிடும் நோக்கிலேயே செயற்பட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஊழல்களுக்கு எதிராகவே தாம் கடந்த கால ஆட்சியில் இருந்து வெளியேறியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கட்சி, அரசியல், இன பேதங்கள் எவையும் இன்றி நாட்டுக்கு சேவை வழங்க வேண்டும்.

மக்களுக்கு சேவை செய்ய பதவிகள் தேவை இல்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விக்கியின் வெளிநடப்புக்கு காரணம் இதுதான்!!

அம்பாரை முஸ்லிம்களுக்கு அமைச்சர் ரிஷாட் அழைப்பு

Mathematics Tutor among 8 remanded over road rage attack