உள்நாடு

‘மக்களின் அழுத்தம் அரசாங்கத்திற்கு பயங்கரவாதமாக மாறியுள்ளது’

(UTV | கொழும்பு) – இந்த நாட்டு மக்கள் முறைமை மாற்றத்தையே கோருகின்றனர் எனவும், அமைச்சுப் பதவிகளை வழங்கி அதனைச் செய்ய முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாட்டு மக்கள் ஆயிரமாயிரம் இன்னல்களில் தவிக்கும் போது ஆட்சியாளர்கள் அமைச்சர் பதவிகளை நீட்டக் கூடாது எனவும், தற்பொழுது முறைமை மாற்றத்தைக் கோரிய இளைஞர்கள் ஒடுக்கப்படுகின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் பேரவை – கலைஞர்கள் சந்திப்பொன்று நேற்று(23) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கலைத்துறையில் உள்ள பல பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், சினிமாத் துறை, தொலைக்காட்சி நாடகத்துறை, பிற கலைத்துறை போன்ற விடயங்கள் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மக்கள் போராட்டத்தில் தலையிட்டு தற்போதுள்ள முறைமையை மாற்ற கலைத்துறையில் உள்ள பலர் ஆற்றிய பங்களிப்பை மறக்க முடியாது எனத் தெரிவித்த எதிர்கட்சி தலைவர், தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் மக்கள் அடக்குமுறையின் காரணமாக உருவாக்கப்பட்ட போராட்டத்தை பயங்கரவாதமாக இந்த அரசாங்கம் கருதுவதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக முன்நிற்பேன் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தல் மற்றும் அவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்துதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts

துறைமுக நகர மனுக்கள் :நாளை காலை வரை ஒத்திவைப்பு

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்க ஜனாதிபதி பணிப்பு

சேதன பசளை இறக்குமதிக்கு தற்காலிக தடை