சூடான செய்திகள் 1

மகிந்த பிறப்பித்துள்ள உத்தரவு

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 16 பேர் கொண்ட குழுவிற்கு மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டங்களில் பங்கேற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழு நேற்று முதல் தடவையாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் குழுக் கூட்டத்தில் பங்கேற்றது.

இதனையடுத்து, ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

54 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த ஒன்றிணைந்த எதிரணி தற்போது 70 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றில் பெரும்பான்மையான எதிர்கட்சி உறுப்பினர்களை கொண்ட தங்களுக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்குமாறு சபாநாயகரிடம் இன்று எழுத்து மூலம் கோரவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் ஒன்றிணைந்த எதிர்கட்சியை அங்கத்துவப்படுத்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காலநிலையில் மாற்றம்

ஆசிய பளு தூக்கும்போட்டியில் பதக்கங்களை வென்ற போட்டியாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

வடக்கில், 1000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க தீர்மானம்