உள்நாடு

மகா பருவத்திற்கு யூரியா கொண்டுவர இந்தியாவிடம் இருந்து கடன்

(UTV | கொழும்பு) – மகா பருவத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியிடமிருந்து 55 அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு இந்திய அரசாங்கம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தக் கடனைப் பெறுவதற்குத் தேவையான உடன்படிக்கைகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிடத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், 2022-23 ஆம் ஆண்டுக்கான மகா பருவத்திற்குத் தேவையான உரங்களை வழங்குவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நெற்செய்கைக்கு தேவையான யூரியா உரம் மற்றும் ஏனைய உரங்களை 800,000 ஹெக்டேயர் பயிர்ச்செய்கைக்கு வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

மகா பருவத்திற்கு 150,000 மெட்ரிக் டன் யூரியா, 45,000 மெட்ரிக் டன் மியூரேட் ஆப் பொட்டாஷ் மற்றும் 36,000 மெட்ரிக் டன் டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் தேவைப்படும்.

இந்த உரமானது சிலோன் பெர்டிலைசர் கம்பனி லிமிடெட் மற்றும் கொழும்பு கொமர்ஷல் பெர்டிலைசர் கம்பெனி லிமிடெட் ஆகியவற்றால் இறக்குமதி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.

Related posts

நாட்டு மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

போதைப்பொருள் கடத்தல் முடிவுக்கு கொண்டு வரப்படும் – பிரதமர் ஹரிணி

editor

குசும்தாச மஹாநாமவின் பிணை மனு நிராகரிப்பு