சூடான செய்திகள் 1

மகாவலி அபிவிருத்தி திட்டங்களை விரைவில் நிறைவு செய்ய பணிப்புரை

(UTV|COLOMBO) உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட மகாவலி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் விரைவில் நிறைவு செய்து அவற்றின் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

உமா ஓயா, மினிப்பே கால்வாய், வடமேல் கால்வாய், மேற்கு எலஹெர உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்களின் தற்போதைய முன்னேற்ற நிலைமைகளை கேட்டறிந்த ஜனாதிபதி, குறித்த காலத்திற்கு முன்னர் இத்திட்டங்களை நிறைவுசெய்து மக்களுக்கு துரிதமாக நன்மைகளை பெற்றுக்கொடுக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

Related posts

இன்று(3) சர்வதேச விசேட தேவையுடையோர் தினம்

புளிச்சாக்குளம், தாராக்குடிவில்லு முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வைர விழா…

நகர மண்டப பகுதிகளில் கடும் வாகன நெரிசல்