உலகம்

மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று

(UTV|இந்தியா) – மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 72ஆவது நினைவு நாள் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு டெல்லி, ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது.

அந்தகையில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளனர்.

அதேபோல் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், இராணுவ தளபதி நரவனே, கடற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி பதூரியா, மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

விடுதலைக்காக பாடுபட்டு உயிர்த் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்களது தியாகத்தை நினைவுகூர்ந்து போற்றும் வகையிலும், காந்தி நினைவு நாள் தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்யாவிற்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

ராணியின் கிரீடத்தில் உள்ள வைரத்தை ஆப்பிரிக்கா கோருகிறது

தான் கைது செய்யப்படலாம் – டொனால்ட் ட்ரம்ப்