உலகம்

மகஸ்ஸார் பகுதியில் தேவாலயம் ஒன்றுக்கருகில் குண்டு வெடிப்பு

(UTV | இந்தோனேஷியா) – இந்தோனேஷியா-மகஸ்ஸார் பகுதியில் தேவாலயம் ஒன்றுக்கருகில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

தற்கொலை குண்டுதாரிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த குண்டு வெடிப்பு காரணமாக சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்கொலை குண்டுதாரிகள் மோட்டார் சைக்கில் ஒன்றில் குறித்த தேவாயலத்திற்கு வந்துள்ளதுடன்,அங்கு சேவையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இவர்களை தேவாலயத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

எனவே, இவர்கள் அந்த இடத்திலேயே குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பூமிக்கு மிக அருகில் செல்லவுள்ள இராட்சத விண்கற்கள்

பொருட்களுக்கான வரிகள் மூன்று மடங்காக அதிகரிப்பு – சவூதி அதிரடி

இந்தியாவினால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல்