உள்நாடு

மகளையும் மகளின் தோழியையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

மகளையும் மகளின் தோழியையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தையொருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளனர்.  பிரதேசவாசிகளினால் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபராவார்.
சந்தேக நபர் வெல்லவாய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சஜித் பிரேமதாசவுக்கே வடக்கு மாகாண தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் – ஐக்கிய மக்கள் சக்தி

ட்ரோன் கெமரா இயக்குவோர் குறித்த தரவுகளை சேகரிக்க தீர்மானம்

டெங்கு நோய் பரவலை தடுக்க குழு நியமனம்