கிசு கிசு

மகளுடன் கோலி-அனுஷ்கா தம்பதி [PHOTO]

(UTV | இந்தியா) – மகளுடன் இருக்கும் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றிபெற்று கோப்பையைத் தட்டித் தூக்கியது. அடுத்து 3 மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் புனேவில் நாளை முதல் துவங்கவுள்ளது.

இதற்காக வீரர்கள் அனைவரும் விமானம் மூலம் புனேவிற்கு சென்றடைந்தனர். யுஷ்வேந்திர சாஹல், ஹார்திக் பாண்டியா போன்றவர்கள் இதுதொடர்பாக புகைப்படங்கள் எடுத்து ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்கள். மேலும், பல வீரர்களும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதை அனைத்தையும் தாண்டி தற்போது, புனே விமான நிலையத்தில் மகளுடன் இருக்கும் அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதனை விராட் கோலியோ, அனுஷ்கா ஷர்மாவோ பகிரவில்லை. புனே விமான நிலையத்தில் இருந்த ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அப்புகைப்படத்தில் அனுஷ்கா ஷர்மா தனது இரண்டு மாத கைக்குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு நடப்பது போலவும், விராட் கோலி சூட்கேஸ் போன்றவற்றை எடுத்துக்கொண்டு நடப்பது போலவும் பதிவாகியுள்ளது. கோலியின் மகள் வாமிகாவின் முகம் தெரியாதபடி புகைப்படம் இருந்தது.

 

Related posts

பால்மா தாட்டுப்பாடும் டோக்கன் முறைமையும்

சமூக வலைதளத்தில் முடக்கப்பட்ட இராஜ், பதவி இராஜினாமா

உலகின் மிகப்பெரிய பணக்காரருக்கு கைமாறும் twitter