விளையாட்டு

மகளீருக்கான உலக கிண்ண போட்டிகளின் நேற்றைய முடிவுகள்

(UDHAYAM, COLOMBO) – மகளீருக்கான ஒரு நாள் சர்வதேச உலக கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் நான்கு போட்டிகள் நேற்று இடம்பெற்றன.

அதன்படி, இலங்கை மகளீர் அணியை எதிர் கொண்ட இங்கிலாந்து மகளீர் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

அவுஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்து மகளீர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவுஸ்ரேலிய மகளீர் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

இந்திய மற்றும் பாகிஸ்தான் மகளீர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய மகளீர் அணி 95 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.

அதுபோல், தென்னாபிரிக்க மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளீர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாபிரிக்க மகளீர் அணி 10 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

Related posts

இந்தியா , நியூஸிலாந்து அணிகள் மோதும் இறுதி போட்டி இன்று

நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி

வேல்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி