கேளிக்கை

ப்ரியா ஆனந்தை அப்படி பார்க்கவில்லை! கௌதம் கார்த்திக் விளக்கம்

(UDHAYAM, COLOMBO) – நடிகை ப்ரியா ஆனந்துடன் காதல் என்று வெளியான தகவலை நடிகர் கௌதம் கார்த்திக் மறுத்துள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ‘வை ராஜா வை’ திரைபடத்தில் நடித்தபோது கௌதம் கார்த்திக் மற்றும் ப்ரியா ஆனந்த் இடையே காதல் ஏற்பட்டதாக பேச்சு கிளம்பியது.

இதை இருவரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் இன்னும் அவர்களின் காதல் பற்றி கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

தற்போது இது குறித்து கௌதம் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.

என்னை ப்ரியா ஆனந்துடன் சேர்த்து வைத்து பல காலமாக பேசுகிறார்கள். ஒரு ஆணும், பெண்ணும் நட்பாக இருக்க முடியாது என்று மக்கள் நம்புவதால் தான் இந்த பேச்சு. நானும், ப்ரியாவும் நெருங்கிய நண்பர்கள், குடும்ப நண்பர்களும் கூட. எங்களுக்கு இடையே காதல் இல்லை என்றார்.

Related posts

பாயல் கோஷ்க்கு வந்த சோதனை

SPB உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா முதலிடம்!