உள்நாடு

பௌத்த மதகுருமார்களுக்கு ஆசிரியர் தொழில் வழங்க நடவடிக்கை – பிரதமர்

(UTV|கொழும்பு) – பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பௌத்த மதகுருமார்களுக்கு ஆசிரியர் தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவைக்கு ஆவணம் சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவை ஆவணத்திற்கு அமைச்சரவை சாதகமான தீர்மானமொன்றை எடுத்திருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன், மருமகன் சடலமாக மீட்பு

editor

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 123 பேர் கைது

ஜோன்ஸ்டனின் வழக்கு நவம்பர் 24இல் – மேல் நீதிமன்றம்