கிசு கிசு

போலி முகப்புத்தக கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

(UTV|COLOMBO) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக்குடன் தொடர்புடைய 270 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் தமக்கு 170 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறித்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகளில் அதிகளவானவை போலி முகப்புத்தக கணக்குகள் தொடர்பிலேயே கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் தகவல் தொழில்நுட்பப் பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

அவ்வாறான போலி முகப்புத்தக கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

 

 

Related posts

“CALLING BELL”அடித்து உரிமையாளரை அழைத்த முதலை

21 வயதுடைய யுவதி மரணம் : PCR முடிவு இன்று

அகில தனஞ்சயவின் கிரிக்கெட் வாழ்க்கை நிறைவடையுமா?