சூடான செய்திகள் 1

போலி நாணயத்தாள்களுடன் நால்வர் கைது

(UTV|COLOMBO)  5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் மஹியங்கனை – தம்பராவ கிராமத்தில் நேற்றைய தினம் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொசன் அலங்கார பந்தல் இடம்பெறும் இடத்தில் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள் வழங்கியமை தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி அவர்களிடமிருந்து ஏழு, 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதற்கமைய அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் போலி நாணயத்தாள்கள் அச்சிடும் இடம் தொடர்பான தகவலும் தெரியவந்துள்ளது.

Related posts

திங்களன்று சில பாடசாலைகளுக்கு விடுமுறை

டிலித்- விமல்- கம்பன்பில – சன்ன ஒன்றாக இணைந்து ஆரம்பித்துள்ள ‘சர்வ ஜன பலய’

மது மாதவ அரவிந்தவ கைது!