கிசு கிசுசூடான செய்திகள் 1

போலி கடன் அட்டைகள் பயன்பாடு…

(UTV|COLOMBO) நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் போலி கடன் அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தம்புள்ளை பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவல்களை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேகநபர்களிடமிருந்து மூன்று வீசா காட் அட்டைகள், இரண்டு ஆள் அடையாள அட்டைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

சந்தேகநபர்களுக்கு எதிராக கண்டி, மாரவில, காலி, மத்துகம, தம்புள்ளை, குளியாபிட்டிய நீதிமன்றங்களில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் தம்புள்ளை நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்கள்.

 

 

 

 

Related posts

SJBயில் UNP காரர்கள் இல்லை: ரணில்

முதல் இலத்திரனியில் ரயில் மார்க்கம் நிர்மானம்

வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று(23)