ஒரு தேடல்

போலிப் பிரசாரங்களை நம்ப வேண்டாம் – அரசு அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக மீண்டும் கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அரச தகவல் திணைக்களத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொவிட் -19 பரிசோதனை நடவடிக்கைள், தொற்றாளர்களை அடையாளம் காணுதல், அவர்களுக்கு அருகில் செயற்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் உரிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டுவதாக அரசாங்கம் வெளியிட்ட குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறையில் தொற்றாளர்களை அடையாளம் கண்டு பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் அந்த நபருக்கு உறுதியாக கொவிட் -19 தொற்றியுள்ளதென போலி பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கு ஒரு சிலர் நடவடிக்கை மேற்கொள்வதனை அவதானிக்க முடிவதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இந்நிலைமை காரணமாக பல்வேறு நிறுனங்களை மூடிவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பல்வேறு போலி தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

அத்துடன் இந்த நிலைமைக்கமைய அரசாங்கத்தினால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பல்வேறு போலி தகவல்கள் சிலரால் தொடர்ந்து கூறப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. எனினும் இதுவரையில் அவ்வறான தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதற்கமைய இவ்வாறான போலி தகவல்களை வெளியிட்டு மக்களை குழப்புவதற்கும் சமூகத்திற்குள் தேவையற்ற குழப்ப நிலைகளை ஏற்படுத்தும் நோக்கிலும் செயற்படுவதாக தெளிவாகியுள்ளது. இந்த முறையில் தவறான செய்திகளை பிரச்சாரம் செய்பவர்கள் தொடர்பில் பல்வேறு விசாரணைகளை நடத்துமாறு அரசாங்கம் உரிய பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

ஒரு கொவிட் -19 நோயாளி உறுதி செய்பட்டால் அவர் தொடர்பில் அராசங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பில் மக்களை தெரியப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும். உரிய முறையில் அந்த தகவல்கள் மக்களிடம் சென்றடைய அரச தகவல் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனால் போலி மற்றும் தவறான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் எனவும் இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார பிரிவுகளினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றி பாதுகாப்புடன் செயற்படுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

 ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை எத்தனையாவது இடம்?

ஒரு வருடத்துக்கு முன்பே பரீட்சைக்குத் தோற்றி மருத்துவ பீடத்துக்குத் தெரிவாகிய கன்னத்தோட்டை பஹ்மா

ரணிலின் கனவு என்னை தோல்வி அடையச் செய்வதுதான் – சஜித்

editor