விளையாட்டு

போலாந்து அணியை வென்ற கொலம்பிய அணி

(UTV|RUSSIA)-உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் எச் பிரிவில் இடம் பிடித்துள்ள போலாந்து மற்றும் கொலம்பிய அணிகள் மோதின.

போட்டி தொடங்கியதில் இருந்து கொலம்பிய அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 40 வது நிமிடத்தில் கொலம்பிய அணியின் யெரி மினா ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா அணி 1-0 என முன்னிலை வகித்தது.

இதை அடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கொலம்பியா அணியின் சார்பில் ராடமல் பால்கோ 70 வது நிமிடத்திலும், ஜுவான் குவாட்ராடோ 75 வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர். இதனால் கொலம்பியா அணி 3-0 என முன்னிலை பெற்றது.

கொலம்பியா அணியினரின் அதிரடி ஆட்டத்தின் முன்னால் போலந்து வீரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கூடுதலாக கிடைத்த நிமிடங்களிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் கொலம்பியா அணி 3 புள்ளிகள் பெற்றது.

ஆனாலும், எச் பிரிவில் ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் கொலம்பிய, போலாந்து அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

விராட் கோலிக்கு BCCI மரியாதை கொடுக்கவில்லை

மாலிங்கவை மும்பை எடுக்காமைக்கான காரணம் இதுவே -மஹேலவின் கருத்து

உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் முதலில் மோதவுள்ள அணிகள்…