உலகம்உள்நாடு

போர் நிறுத்தம் இல்லை: இஸ்ரேல்

(UTV | கொழும்பு) –

இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசாமீது ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய 9-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து ஐநூறைக் கடந்துள்ளது.

காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் ராணுவம் எந்த நேரத்திலும் மும்முனை தாக்குதல் நடத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்லவும், காசாவில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேறும் வகையிலும் காசா- எகிப்து எல்லையில் ராஃபா கிராசிங் இன்று திறக்கப்படுகிறது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ராஃபா கிராசிங் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் தெற்கு காசாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஹமாசுக்கு எதிரான போரில் இதுவரை சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வெளிநாட்டினர் காசாவை விட்டு வெளியேறுவதற்கு ஈடாக மனிதாபிமான நிவாரண உதவிகள் காசாவுக்குள் கொண்டு செல்ல அனுமதி வழங்கவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர்கள் பதவி நீக்கம்

மைத்திரியின் புதிய கூட்டணி

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று கூடுகின்றது!