உலகம்

போரினை தவிர்க்க நடவடிக்கை – ஈரான்

(UTV|ஈரான்) – போரினை தவிர்க்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

ஈரான் – அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான போர்ப்பதற்றத்தை தணிக்க வல்லரசு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

ஈரான் இராணுவ படைத்தளபதி கொலை செய்யப்பட்டமைக்கு பதிலடியாக ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் யாரும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்த அமெரிக்கா, 11 வீரர்கள் காயமடைந்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இராணுவ மோதல் அல்லது போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீதான தாக்குதல், ஈரான் இராணுவ படைத்தளபதி கொல்லப்பட்டதற்கு இழப்பீடு என கருதுகிறோம்.

போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈரான் அரசு தினமும் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்னும் சாத்திக்கூறுகள் உள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஏமன் நாட்டின் மீது சவூதி கூட்டுப்படையினர் தாக்குதல்

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா உறுதி

மீண்டும் இன்று காலை ஜப்பானில் நிலநடுக்கம்..!