உள்நாடு

போதை மாத்திரைகளுடன் வைத்தியர் கைது!

(UTV | கொழும்பு) –  போதை மாத்திரைகளுடன் வைத்தியர் கைது!

பதுளை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் 145 போதை மாத்திரைகளை வைத்திருந்த நிலையில் நேற்று (14) இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த வைத்தியர் பதுளை மைலகஸ்தன்னவில் உள்ள தனது தனியார் வைத்திய நிலையத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் யுவதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் காரும் போதைப்பொருளும் பதுளை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்குரிய வைத்தியர் இன்று (15) பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

தொடர்ந்து வரும்  வைத்தியசாலையில் தற்கொலைகள்

தேர்தலுக்கான திகதி அறிவிப்பில் அவசரம் வேண்டாம் – முன்னாள் அமைச்சர் ரிஷாத் கோரிக்கை