சூடான செய்திகள் 1

போதை மாத்திரைகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் கைது

(UTV|COLOMBO)-டெமடோல் மாத்திரைகள் 600 ஐ விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவர் கற்பிட்டி, ஏத்தாலே பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கற்பிட்டி, ஏத்தாலே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் போதைப் பொருள் வர்த்தகத்துடன் சம்பந்தப்பட ஒருவர் என்பதுடன், கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

அரச மருந்து கூட்டுத்தாபனத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர்!

காலநிலையில் மாற்றம்…

ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வு காண உலகளாவிய ஒற்றுமை அவசியம்