சூடான செய்திகள் 1

போதை மாத்திரைகளுடன் போலி வைத்தியர் கைது

(UTV|COLOMBO)-வீரகுல பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கமைய வீரசூரியகந்த, பசியாலை பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட போலி வைத்திய நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தில் இருந்த பல்வேறு வகையான மருந்து பொருட்களுடன் போதை மாத்திரைகளும், ஆயுர்வேத வைத்தியர் என்று கூறப்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீரிகம, பமுனுவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரிப்பு

இன்று இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பம்

சார்க் வர்த்தகக் கைத்தொழில் சபையின் தலைமை பதவி இலங்கைக்கு