உள்நாடு

போதை பொருட்களுடன் 04 பேர் கைது

(UTV | ஹம்பாந்தோட்டை)- திஸ்ஸமஹராம, பன்னேகமுவ, மற்றும் தெபரவெவ ஆகிய பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத போதை பொருட்களை தம்வசம் வைத்திருந்த 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 696 கிராம் ஐஸ் ரக போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related posts

பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இரத்து

கொவிட் 19 குறித்த செய்திகள் கண்காணிக்கப்படும்

தடம்புரண்ட பொடி மெனிகே!