உள்நாடு

போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தக் கோரி – வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

(UTV | கொழும்பு) –

போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த கோரியும், இறந்தவருக்கு நீதி கோரியும் வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு சென்றிருந்த இளம் குடும்பஸ்தரை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இருவர் அழைத்து கதைத்துள்ளனர்.

இதன்போது, குறித்த இளம் குடும்பஸ்தரை தாக்கி நிலத்தில் தூக்கி போட்டுள்ளனர். இதனால் இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார். அங்கு நின்றவர்கள் அவரது வீட்டிற்கு தகவல் வழங்கியதையடுத்து, படுகாயமடைந்த குடும்பஸ்தரின் தாயார் வருகை தந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதும் குறித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக் கிழமை மரணமடைந்தார். இச் சம்பவத்தில், வவுனியா, மகாறம்பைக்குளம் காந்தி வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரதீபன் என்பவரே உயிரிழந்தவராவார். இவரது இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று நேற்று பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதன்போது, சடலத்தை எடுத்து வந்த அக் கிராம மக்களும், கிராம பொது அமைப்புக்களும் சடலத்துடன் போதைப் பொருள் பாவனைக்கு எதிராகவும், இறந்தாவருக்கு நீதி கோரியும் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ஐஸ் – கஞ்சா- மாபா- ஹெரோயின் – போதை மாத்திரை என்பவற்றை தடை செய், தொடர்ச்சியாக அடாவடித்தனம் செய்வோரை கைது செய், மாணவர் சமூகத்தை சீரழிக்கும் போதைப் பொருட்களை தடை செய்’ என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

     

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஷானி மற்றும் விஜேதாச ஆணைக்குழு முன்னிலையில்

இன்று மேலும் 274 பேருக்கு கொரோனா

கோதுமை மா விநியோகத்தில் ஈடுபடும் பிரதான இரு நிறுவனங்களுக்கு நிதி நிவாரணம் யார் வழங்கியது? அநுரகுமார திஸாநாயக்க