சூடான செய்திகள் 1

போதைப் பொருள் குற்றச்சாட்டில் 9410 பேர் கைது

(UTV|COLOMBO) – கடந்த மூன்று வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையின் போது நச்சுத் தன்மையுடைய போதைப் பொருள் மற்றும் போதைப் பொருள் பயன்பாடு சம்பந்தமான குற்றச்சாட்டில் 9410 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டத்திற்கு அமைவாக இந்த விஷேட சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய நாட்டில் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக போதைப் பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பில் தீர்மானம் இன்று

மஹிந்த ராஜபக்ஷ குட்டுவதற்கு தகுதியானவர்

மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு