உள்நாடு

போதைப் பொருளுக்கு அடிமையான கிராம அலுவலர் கைது!

(UTV | கொழும்பு) –

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றி வருகின்ற கிராம அலுவலர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற குறித்த கிராம அலுவலர் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினர்களுக்கும் போதை பொருட்களை வியாபாரம் செய்து வந்ததாக மக்களால் பொலிஸாருக்கு இரகசிய தகவல் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக குறித்த கிராம அலுவலர் கெரோயின் ஐஸ் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை பல இளைஞர்கள் ஊடாக பல்வேறு தரப்பினருக்கும் விற்பனை செய்து வருவதோடு அவரும் குறித்த போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாக இருந்ததை அறிந்த மக்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்

இந்நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களது வழிகாட்டலில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் பல நாட்களாக தொடர்ச்சியாக முயற்சி செய்து வந்த நிலையில் நேற்று குறித்த போதைப் பொருளுக்கு அடிமையான கிராம அலுவலர் மற்றும் இவருடன் இணைந்து குறித்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த மேலும் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இவர்களை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட போது குறித்த நபர்கள் போதை பொருளுக்கு அடிமையாகியிருந்தமை அறியப்பட்டிருக்கின்ற நிலைமையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
குறித்த நபர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வர்த்தக நிலையங்கள் – மருந்தகங்கள் திறந்திருக்காது

தந்தையோடு சேர்ந்து திட்டம் தீட்டி கணவனை வெட்டி படுகொலை செய்த மனைவி

 பயன்படுத்தாத காணி உரிமையாளர்களுக்கு அபராதம்!