கேளிக்கை

போதைப்பொருள் விவகாரம் பிரபல நடிகை கைது

(UTV | இந்தியா)- போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை ராகிணி திவேதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் 2-வது கதாநாயகியாக நடித்தவர் ராகிணி திவேதி ஆர்யன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

கன்னடத்தில் சங்கர் ஐ.பி.எஸ், கெம்பே கவுடா, வில்லன் பங்காரி, சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதை பொருளை விற்ற டி.வி. நடிகை அனிகா உட்பட 3 பேரை கைது செய்து விசாரித்ததில் கன்னட திரையுலகினர் நடத்தும் விருந்து நிகழ்ச்சிகளில் போதை பொருட்களை அவர் விற்று வந்த தகவல் வெளியானது.

இந்த நிலையில் நடிகை ராகிணியின் நெருக்கமான நண்பர் ரவி என்பவரை போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நடிகை ராகிணி திவேதிக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆனால் நேற்று காலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார். இது கன்னட பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

ரஜினியின் பேட்ட பொங்கல் அன்று ரிலீஸ்

பிக் பாஸ் போட்ட திட்டத்தை சொதப்பிய ஸ்ரீ!

பொலிஸ் அவதாரத்தில் ஆண்ட்ரியா…