சூடான செய்திகள் 1

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக விசேட ஆலோசனை சபை

(UTV|COLOMBO) ஜனாதிபதி தலைமையில் நடைமுறைப்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலக பிரிவு மற்றும் ஏனைய சில பிரிவுகள் ஒன்றிணைந்து மிகவும் நவீன மற்றும் விரிவுப்பட்ட வகையில் இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக விஷேட ஆலோசனை சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரட்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்விலேயே செயலாளர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் கடந்த 23 ஆம் திகதி தொடக்கம் ஜீலை மாதம் 1ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. நேற்று இடம்பெற்ற சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரசாங்கத்தினால் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தில் தற்பொழுது போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு சட்டத்தில் மூலம் பிடிப்பட்ட சுமார் 11 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. போதைப்பொருளை பயன்படுத்திய போதிலும் சட்டத்தில் சிக்காத சுமார் 1 லட்சம் இளைஞர்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Related posts

கைவினைஞர்களுக்கு காப்புறுதி திட்டம் – மார்ச்சில் நடைமுறைப்படுவதாக அமைச்சர் றிஷாட் அறிவிப்பு

“அங்கொட லொக்கா”டுபாய் காவற்துறையினரால் கைது

கிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை அறிக்கையை ஆராய 5 பேர் கொண்ட குழு நியமனம்