சூடான செய்திகள் 1

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் சிறந்ததொரு வேலைத்திட்டம் அறிமுகம்

(UTV|COLOMBO) போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை விட, சிறந்ததொரு வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன காலி – ரூமஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனை தெரிவித்துள்ளார்.

காவற்துறையினர் மற்றும் முப்படையினர் இணைந்து நகர் பகுதியில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

விசேடமாக மேல்மாகாணம், கிழக்கு, தென் மாகாணங்களின் கரையோர பிரதேசங்கள் மற்றும் கொழும்பு நகர் ஆகியன போதைப்பொருட்கள் அதிக பாவனைக் கொண்ட பிரதேசங்களாகும்.

இந்த நிலையில், குறித்த பிரசேதங்களில் தற்போது வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அவை எதிர்காலத்தில் மேலும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும்.

Related posts

“முஸ்லிம்களின் ஜும்ஆ தொழுகைக்கு இடையூறு செய்த கிழக்கு ஆளுனர்?” இம்ரான் மகரூப் அவசர கோரிக்கை

இன்று பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவருக்கிடையில் சந்திப்பு

பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து