உள்நாடு

போதைப்பொருளில் விஷம் காரணமாக அதிக உயிரிழப்பு – அறிக்கை கையளிப்பு

(UTV | கொழும்பு) –

வைத்தியசாலைகளில் பதிவாகும் போதைப்பொருள் விஷம் காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சுகாதார ரம்புக்வெல்ல தனது டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வைத்தியர்கள் மற்றும் நோயாளிகளின் இரகசியத்தன்மையை பாதுகாக்கும் வகையில் முழுமையான அறிக்கை வெளியிடப்பட மாட்டாது எனவும் அமைச்சர் இது தொடர்பான டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் முடிவுகள் மட்டுமே பகிரங்கப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனைத்து தூர பிரதேச ரயில் சேவைகளும் இரத்து

வீடுக்கு வாடகை செலுத்தாத கெஹலிய: சம்பளத்திலிருந்து பெற பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம்

பேராதனை பல்கலை கழக மாணவர்கள் கைது..