உள்நாடு

போதுமான அளவு முட்டைகள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் – தட்டுப்பாடு ஏற்படாது

தட்டுப்பாடு ஏற்படாத வகையில் போதுமான அளவு முட்டைகள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என இலங்கை விலங்கு உற்பத்தி சங்கம் அண்மையில் அறிவித்துள்ளது.

தற்போதைய சில்லறை விலையில் முட்டை ஒன்றின் விலை 35 ரூபா. முதல் 36 ரூபா வரை விற்கப்படும் என, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை விநியோகம் மற்றும் தேவைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைவாக பண்டிகைக் காலத்தில் சந்தையில் ஒரு முட்டையின் விலையை 45 ரூபாவாக முன்னெடுப்பதே நோக்கம் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.

அரிசி, தவிடு மற்றும் சோளத்தின் விலை அதிகரிப்பால் முட்டை உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் குணசேகர தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சி உற்பத்தி அதிகளவில் இருப்பதாகவும், சந்தைக்கு கோழி இறைச்சி தடையின்றி வழங்குவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

நீர் தொட்டியில் வீழ்ந்து பெண் குழந்தை பலி!

மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக சுபைர்தீன் மீண்டும் நியமனம்!

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்