உள்நாடு

போதுமான அத்தியாவசிய உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்திருக்க பணிப்புரை

(UTV | கொழும்பு) –   பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

சில வர்த்தகர்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் காட்டி விலையை அதிகரிக்கச் செய்யும் திட்டமிட்ட முயற்சிகளை இதன் மூலம் தடுக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நேற்று (02) பிற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற வர்த்தக, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய சவால்களுக்கு விரைவான தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மொத்த சந்தைக்கு விநியோகிக்கப்படும் விவசாய விலை பொருட்களில் ஒரு பகுதியை நேரடியாக கிராம சந்தைக்கு வழங்க வேண்டும். இதன் மூலம் போக்குவரத்துச் செலவு குறைவதோடு, கிராமப்புற நுகர்வோர் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கும், விவசாயிகள் அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கும் இயலும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி நியாயமற்ற விலையில் வர்த்தகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

Related posts

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவருக்கு மரண தண்டனை [VIDEO]

பேலியகொடை பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய ஆலோசனை