உள்நாடு

போதகர் ஜெயராமுக்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு

(UTV | கொழும்பு) –  போதகர் ஜெயராமுக்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் , போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக விசாரணைகோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் எழுத்து மூல முறைப்பாடு

இந்த எழுத்துமூல முறைப்பாடு நேற்றையதினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த போதகர் புத்தரை அவமதித்துள்ளதாகவும் அவரது இந்த செயற்பாடுகளால் நாட்டின் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் கிறிஸ்தவ அடிப்படைவாத கும்பல் மிக வேகமாக மதமாற்றத்தை பரப்பி வருவதாகவும் கலகொடஅத்தே ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த சதியில் இந்த மத போதகரும் ஒரு அங்கம் என்றும் ஞானசார தேரர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சபாநாயகரின் கோரிக்கை

2000 ரூபா பணத்திற்காக – 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்பனை செய்த தாய்!

சமந்தா பவர் சனியன்று இலங்கைக்கு