விளையாட்டு

போட்டியில் இருந்து விலகிய ஷாகிப் அல் ஹசன்…

(UTV|DUBAI)-இந்தியாவுடன் நாளை(28) நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகீப் அல் ஹசன் விளையாட மாட்டார் என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அவரது இடது கை விரலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே இவ்வாறு போட்டிக்கான வாய்ப்பு தவறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஆவறது உபாதை நிலைமை காரணமாக நேற்று(26) பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் பங்கேற்கவில்லை.

குறித்த நிலைமை காரணமாக 06 வாரங்களுக்கு ஹசனுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், நிவ்யோர்க் அல்லது மெல்போர்ன் சென்று அவரது விரலுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரி20 உலகக்கிண்ணம் – கிண்ணத்தை வென்றது இந்தியா!

உலக கட்டழகராக இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஸ்பராஜ்

தோனியை தேர்வு செய்தவர் தற்கொலை