விளையாட்டு

போட்டிகளில் இருந்து க்றிஸ் கெய்ல் ஓய்வு?

(UTV|WEST INDIES) மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான க்றிஸ் கெய்ல் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உலக கிண்ண போட்டிகளின் பின்னர், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தான் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

39 வயதுடைய கிரிஸ் கெய்ல் 284 ஒருநாள் போட்டியில் விளையாடி, 9,727 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு, அதில், 23 சதங்கள், ஒரு இரட்டை சதம் மற்றும் 49 அரை சதங்களும் அடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து முகமது ஹஃபீஸ் நீக்கம்

சர்வதேச அளவில் 100-வது கோல் அடித்த ரொனால்டோ

டோனியால் தொடர்ந்து விளையாட முடியுமா? – கிரிக்கெட் வாரியம்