சூடான செய்திகள் 1

போக்கு வரத்து நெரிசல் அதிகரிப்பே, வாகனங்களில் வரி அதிகரிப்புக்குக் காரணம்

(UTV|COLOMBO)-பெருந்தெருக்களின் போக்கு வரத்து நெரிசல் அதிகரிப்பே, வாகனங்களில் வரி அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்தது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

மல்வத்து அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களை நேற்று சந்தித்ததன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சிறிய வாகனங்களுக்கு இருந்த கோரல்களுக்கு அமைய, அவற்றிட்கு இருந்த வரி அறவீடுகள் நீக்கப்பட்டு, விலை குறைக்கப்பட்டதுடன், அரச பணியாளர்களின் வேதனங்களும், 2015ஆம் ஆண்டு அதிகரிக்கப்பட்டன.

அதன்படி, சிறிய வாகனங்களில் இறக்குமதிகள் கணிசமாக அதிகரித்ததுடன், வாகன போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டன. இதனைக் கருத்தில் கொண்டே நிதியமைச்சு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருக்கும் என தாம் கருதுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

பத்தேகம பிரதேச சபை தவிசாளர் கைது

பாராளுமன்ற தெரிவுக் குழு முன் ஜனாதிபதியை முன்னிலையாகுமாறு கோரிக்கை

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு