உள்நாடு

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7,676 சாரதிகள் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (29 ஆம் திகதி காலை 06.00 மணி முதல் 30 ஆம் திகதி காலை 06.00 மணி வரை) போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7,676 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய, நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, மது போதையில் வாகனங்களை செலுத்திய 413 சாரதிகளும், பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை செலுத்திய 49 சாரதிகளும், அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்திய 110 சாரதிகளும், சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் 694 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் 5,324 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

அரிசி இறக்குமதி – 67,000 மெட்ரிக் தொன் வந்தடைந்தது

editor

மினி இராணுவ முகாம் அகற்றம்

குறித்த சில வாகனங்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது!