உள்நாடுசூடான செய்திகள் 1

போக்குவரத்து சேவை முகாமைத்துவ செயலணியின் கலந்துரையாடல் இன்று

(UTV|கொழும்பு)- போக்குவரத்து சேவை முகாமைத்துவ செயலணியின் கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இன்று(19) இடம்பெறவுள்ளது.

இதன்போது, பொதுப் போக்குவரத்து சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்தும் மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த இந்த செயலணியில் 21 அங்கத்தவர்கள் உள்ளடங்குகின்றதுடன், இந்த செயலணியின் தலைவராக அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்ன செயற்படுவதுடன், மேலதிக செயலாளர் ஜே.எம்.திலகரத்ன பண்டா செயலணியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெள்ளைப்பூண்டு விவகாரம் : வர்த்தகரின் மகன் கைது

களனிப் பல்கலைக்கழக மாணவருக்கும் கொரோனா

மேல்மாகாணத்திற்கான ஊரடங்கு தளர்வு குறித்து அறிவிப்பு