சூடான செய்திகள் 1

போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகையை 25000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி வௌியீடு

(UTV|COLOMBO) 7 ​போக்குவரத்து குற்றங்களுக்கான குறைந்த பட்ச அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி பத்திரம் வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி,

  • செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல்.
  • மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்துதல்.
  • புகையிரத வீதியினுள் பாதுகாப்பின்றி வாகனத்தை செலுத்துதல்.
  • செல்லுபடியாகும் வாகன காப்புறுதி இன்றி வாகனம் செலுத்தல்.
  • அதிக வேகத்தில் வாகனம் செலுத்துதல்.
  • சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாதவர்களை சேவைக்கு அமர்த்துதல்.
  • இடது பக்கமாக முந்திச் செல்லல்.

ஆகிய போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகையை அதிகரிக்கும் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அதில் புகையிரத வீதியினுள் பாதுகாப்பின்றி வாகனத்தை செலுத்துதல் புதிய போக்குவரத்து குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் , குறிப்பிட்ட வயதுக்கும் குறைவானவர்கள் வாகனம் செலுத்துதல் , பாதுகாப்பின்றி மற்றும் ஆபத்தானவகையில் அதிக வேகத்தில் சிற்றூர்ந்தை செலுத்துதல், கைப்பேசியை பயன்படுத்தியவாறு வாகனம் செலுத்துதல் போன்ற போக்குவரத்து குற்றங்களுக்கான அபராத் தொகையை எதிர்காலத்தில் அதிகரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

மன்னார் மாவட்டத்திற்கு 5000 காணி உறுதிகள்- ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி ரணில்

வைத்தியர்களுக்கு சம்பளம் இல்லை-சுகாதார அமைச்சு

சு.கட்சி வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது