உள்நாடு

போக்குவரத்து கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டில் 306 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலயங்களில் போக்குவரத்து கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டில் 306 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் 9,588 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மேல் மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் மேல் மாகாணத்தை விட்டு வௌியேறும் 14 இடங்களில் நேற்று பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 1,826 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாகனங்களில் பயணித்த 3,525 பேர் சோதனைக்கு உட்டபடுத்தப்பட்டுள்ளதுடன் 42 வாகனங்களில் பயணித்த 92 பேர் மாகாண எல்லையில் வைத்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

 

Related posts

திருத்தப் பணிகள் காரணமாக 10 மணி நேர நீர் வெட்டு

பதிவு செய்தலுக்காக 33 புதிய கட்சிகள் விண்ணப்பம்

தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களின் விலை தொடர்பில் வெளியான தகவல் !