உள்நாடு

போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீளவும் இன்று முதல் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீளவும் இன்று(08) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பேரூந்து முன்னுரிமை ஒழுங்கை விதி மொறட்டுவை முதல் புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தை வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இன்று காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் பேரூந்துகளுக்கான முன்னுரிமை ஒழுங்கை விதி நடைமுறைப்படுத்தப்படும் என மேல்மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தென்னகோன் தெரிவித்திருந்தார்.

மேலும், இது குறித்து கண்காணிப்பதற்காக நாளாந்தம் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக, 500 மேலதிக அதிகாரிகளும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆசிரியர் பற்றாக்குறை – சஜித் கூறிய தீர்வு !

வளிமண்டலவியல் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

editor

‘சீன உரம் அல்லது இரசாயன உரம் : தோல்வியில் முடிந்தது’