சூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளரை கைது செய்ய கோரிக்கை

(UTV|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அறிவித்தல் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை உடனடியாக கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்து மூலம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

இவ்வாறு நடவடிக்கை எடுக்காததனால் பொதுமக்கள் மக்கள் 330 இற்கும் அதிகமான உயிர்கள் இழக்கப்படுவதற்கும், 500 இற்கும் அதிகமானோர் காயமடைவதற்கும் காரணமாக அமைந்தது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

Related posts

“02 மாதங்களில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்படும்” இராஜாங்க அமைச்சர்

ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்…

ரணிலை நேரில் சந்தித்து, இறுதி தீர்வு கட்டப்போகும் சம்மந்தன்!